10.12.07

"காசி ஆனந்தன் கவிதைகள் - பகுதி 5"

கூண்டு
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என் கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்...

திமிர்
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்.

மண்
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?

கொலை
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு...
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்க்கை வேண்டி
தனக்கு..

குடுகுடு
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்...

No comments: