17.9.08

இறுதிக்கு சற்று முன் நிற்கும் ஈழப்போர் நான்கு

வவுனியா இராணுவ படைத்தளத் தாக்குதலில் காளமாடி வீழ்ந்த மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்...

இம் மாவீரர்களின் தியாகம், ஈழ விடுதலை வரலாற்றின் நெடுகிலும் நெஞ்சை நிமிர்த்தி நடந்து வரும் தமிழர் வீரத்தின் மற்றொரு ஆழமான தடம்.
மேலும், தமிழினத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இருக்கும் இறுதி யுத்தத்தில் தமிழர் படைகள் ஈட்டப்போகும் பாரிய வெற்றிக்கான கட்டியம் கூறலாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதல் புலிகளின் படைத்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.கரும்புலிகளை மட்டுமே பயன்படுத்திய கட்டுநாயாக தாக்குத்லிணை அடுத்து கரும்புலிகளையும் வான்புலிகளையும் பயன்படுத்தி அநுராதபுரத்தை தக்கியிருந்தனர்.அந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இப்போது கரும்புலிகள் வான்புலிகள் ஆகியவற்றுடன் கனரக தாக்குதலையும் இணைத்து புதிய பரிணாமத்தை அடைந்துள்ளனர்.

வரவு செலவு அறிக்கை மீதான விவாதத்தின் போது இந்த ஆண்டு இறுதிக்குள் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விடும்.எனவே அடுத்த ஆண்டு விலைவாசி கட்டுக்குள் வந்துவிடும் என்று மகிந்த கூறியிருந்தார்.இந்தியா தனது ரேடார் கருவி மற்றும் அதை இயக்குபவர்களுக்குப் பதிலாக தனது தருப்புக்களை அனுப்பினால் கூட அது நடக்காது என்பது இப்போது சிங்கள மக்களுக்கு நன்கு புரிந்திருக்கும்.

சிங்கள படைகளின் தாக்குதல்கள் வன்னி பகுதியில் மட்டுமே நடக்கும் போது, புலிகள் தங்கள் தாக்குதல்களை வன்னி-திருமலை-வவுனியா-மட்டக்களப்பு-அம்பாறை என்று பரவலாக்க துவங்கியுள்ளனர்.கிழக்கிலும் தெற்கிலும் புலிகளால் மேற்கோள்ளப்படும் மிதிவெடி, பொறிவெடி, குறிசூட்டு தாக்குதல்கள், மோட்டார் வீசுதல்கள் மற்றும் கமண்டோ தாக்குதல்கள் ஆகியவை சிங்கள படை கிழக்கை ஆக்கிரமித்தபோது புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறியதை நினைவுபடுத்துகிறது."கிழக்கில் போரை மரபு வழியில் இருந்து கொரில்லா வழிக்கு மாட்றி விட்டோம். 20 வருட கொரில்லா போர் அனுபவம் உள்ள எங்களுக்கு அது எளிதான விடாயம்தான்" என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

நடுப் பகுதியில் வந்திருக்கும் நான்காம் கட்ட ஈழப் போரில் இனி அதிரடிகளின் காலம் துவங்கவிருக்கிறது.